top of page

உடலியல் - மனிதன் 

மனிதன் - HUMAN

ஆன்மா - SOUL 

Atman.png

அழிவற்றது

(Indestructible)

உடல் - BODY

main-qimg-e69e5e2f4137d5e395473f1235b9d2

அழியக் கூடியது

(Perishable)

மனம் - MIND

power-of-the-subconscious-mind-1280x720.

மாறக் கூடியது 

(Changeable)

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது

Andam.jpg

உடலின் மண்டலங்கள்

(BODY SYSTEMS)

body.jpg
  • YouTube
  • Facebook

ஜீரண மண்டலம் 

(Digestive system)

digestion.jpg

ஜீரணத்தின் முதல் பகுதி சாப்பிடுதலில் தொடங்குகிறது. பற்களின் துணையோடு உணவு அரைக்கப்படுகிறது.

உமிழ்நீர் சுரப்பில் உள்ள நொதிகள் மூலம் உணவு கரைக்கப்படுகிறது. உணவுக்குழாயின் சுருங்கி விரியும் தன்மையால் உணவு கரைசல் இரைப்பையை அடைகிறது.

வாயில் நடப்பது முதல் கட்ட ஜீரணம். வயிற்றில் நடப்பது இரண்டாம் கட்ட ஜீரணம். மூன்றாம் மற்றும் இறுதி கட்ட ஜீரணம் சிறுகுடலில் நடக்கிறது.

கல்லீரலில் இருந்து சுரக்கும் பித்தநீரும், கணையம் சுரக்கும் கணைய நீரும் சிறுகுடலில் தான் உணவு கூழோடு கலந்து ஜீரணத்தின் முக்கிய கட்டம் நடக்கிறது.

பெருங்குடலில் உணவானது மீண்டும் ஒரு லேசான சீரான முறைக்கு உடபடுத்தப்படுகிறது.

இரத்த சுற்றோட்ட மண்டலம் 

(Circulatory system)

Circulatory unit.png

இரத்த சுற்றோட்ட மண்டலத்தின் தலைவர் "இதயம்" .  \உணவுச் சத்துக்களையும் உயிர்காற்றையும் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. செல்களில் இருந்து கழிவுகளை பெற்று கழிவுநீக்க உறுப்புகளுக்கு கொண்டு செல்கிறது.

இரத்தத்தின் முக்கிய பணிகள்:


1. நுரையீரலில் இருந்து பிராண வாயுவை பெற்று உடல் முழுக்க எடுத்துச் செல்கிறது.


2. செல்களில் இருந்து கழிவுகளை பெற்றுவந்த கழிவுநீக்க உறுப்புகளுக்கு கொடுக்கிறது.

3. உடலின் வெப்பநிலையை  பராமரிக்கிறது.

4.நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் சுரப்பு நீர்களை (ஹார்மோன்கள்)  உடலின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வேலையை இரத்தம் செய்கிறது .

நிணநீர் மண்டலம் 

(Lymphatic system)

Lymphatic.jpg

நிணநீர் மண்டலத்தின் தலைவர்  " மண்ணீரல்" 

இரத்த ஓட்டத்தை போன்றே நிணநீர் ஓட்டமும் உடல் முழுவதும் நடைபெறுகிறது. 

 

இரத்தத்தின் பணிகளில் நிணநீர் பங்கு பெறுகிறது. "அந்நிய பொருட்களை எதிர்ப்பது" .

இரத்தக் குழாய்களை போன்றே நிணநீர் குழாய்கள் இருக்கின்றன (மெல்லிய இழைகள் போல), 

இரத்தத்தில் இருந்து கசிந்து வெளியேறுகிறது.  

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இருந்து பிரிகிறது. 

நிணநீர் நிறமற்றவை.

முக்கிய பணி: உடலுக்கு வரும் அந்நிய பொருட்களை எதிர்க்கிறது.

தசை மண்டலம் 

(Muscular system)

Picture3_edited.jpg

செல்கள் இணைந்து திசுக்கள் ஆவது போல திசுக்கள் இணைந்து தசைகளாகின்றன.

ஆணின் எடையில் 43 %, பெண்ணின் எடையில்  36 % தசைகள்.

உயிருள்ள தசை: சுருங்கி விரியும் , ஒளி ஊடுருவும்,

உயிரற்ற தசை: விரைத்த தன்மை, ஒளி ஊடுருவாது .

தசைகளின் சுருங்கி விரியும் தன்மைக்கு கல்லீரல் தான் காரணம்.
 

தசைகளின் வகைகள்:

1. வரி தசைகள்  ((Skeletel Muscles)

2. வரியற்ற தசைகள் (Smooth Muscles)

3. இதய தசைகள் (Cardiac Muscles)

சுவாச மண்டலம் 

(Respiratory system)

Lung.png

உடலில் நடைபெறும் அனைத்து வேலைகளுக்கும் ஆதாரம் சுவாச மண்டலம் தான்.

சுவாசம் மூலமாக உயிர் காற்றை பெற்று செல்களுக்கு கொடுப்பது, செல்களிலிருந்து கழிவுகளை பெற்று வெளியே அனுப்புவது.

வகைகள்:

1. வெளி சுவாசம்

 2. உள் சுவாசம் 

வெளி சுவாசத்தின் தொடர்ச்சி உள் சுவாசம், உள்  சுவாசாத்தின் தொடர்ச்சி வெளி சுவாசம்.

நுரையீரல்:

800 சதுர அடி முதல் 1000 சதுர அடி அரை அளவிற்கு காற்று கொள்ளளவு 

கழிவு நீக்க மண்டலம் 

(Excretory system)

excre.png

நமது உடலின் ஒவ்வொரு செல்லும் கழிவு நீக்கும் செயலை செய்கிறது.

செல்கள் நீக்கும் கழிவுகளின் தொகுப்பையே கழிவு நீக்க உறுப்புகள் வெளியேற்றுகின்றன.

வகைகள்:

1. திடக் கழிவு - ஜீரண மண்டலத்தில் இருந்து நேரடியாக வெளியேறும் கழிவுகள் 


2. திரவ கழிவு - சிறுநீரகம் மற்றும் தோல் மூலம் வெளியேறும் கழிவுகள் 


3. காற்றுக்  கழிவு - நுரையீரல் மற்றும் தோல் மூலம் வெளியேறும் கழிவுகள் 

கல்லீரல்: நச்சுக்களை நீக்க பயன்படுவதால் உடலின் மரம் எனப்படுகிறது.

எலும்பு மண்டலம்  

(Skeletal system)

Bone_Both_edited_edited.jpg

நம் உடலுக்கு அடிப்படை உருவத்தை தருகிறது.

மனித எலும்பானது 50 % தண்ணீராலும், 25 % கால்சியம் பாஸ்பேட்டாலும்  , 25% இதர சத்துப் பொருட்களாலும் ஆனது.

எலும்புகளின் வகைகள்:


1. நீள் எலும்புகள் (Long Bones)


2. சிறிய எலும்புகள் (Short Bones)


3. தகடு எலும்புகள் (Flat Bones)


4. செசமாயிடு எலும்புகள் (Sesamoid Bones)


5. ஒழுங்கற்ற எலும்புகள் (Irregular Bones)
 

நாளமில்லா சுரப்பி  மண்டலம் 

(Endocrine gland system)

endogrin_edited_edited.jpg

நம் உடலில் சுரக்கும் சுரப்பு நீர்கள் பல்வேறு முக்கிய பணிகளுக்கு அடிப்படையாக இருக்கின்றது.

சுரப்பு நீர்களை சுரக்கும் அமைப்பை சுரப்பி என்கிறோம்.

வகைகள்:
1. நாளமுள்ள சுரப்பிகள் 

  •  உமிழ்நீர்

  • வியர்வை

  • கண்ணீர் உள்ளிட்டவை


2. நாளமில்லா சுரப்பிகள்

  • பிட்யூட்டரி சுரப்பி 

  • தைராய்டு சுரப்பி 

  • அட்ரீனல் சுரப்பி 

  • கணைய சுரப்பி 

  • பீனியல் சுரப்பி 

  • தைமஸ் சுரப்பி  உள்ளிட்டவை

நரம்பு மண்டலம்  

(Nervous system)

nervous_edited_edited.jpg

நரம்பு மண்டலத்தின் தலைவர் மூளை.

நம் உடலின் தகவல் தொடர்வு ஊடகம். செயல்களுக்கான தூண்டல்களை பெறுவதும் கடத்துவதும் நரம்பு மண்டலம் தான்.

கண், காது, மூக்கு, வாய், தோல் ஆகிய ஐம்புலன்கள் மூலம் தகவல்களை உள்வாங்கி மூளைக்கு கொண்டு செல்கிறது. மூளையில் இருந்து உறுப்புகளுக்கு எடுத்து செல்கிறது.

உடல் முழுக்க உள்ள நரம்புகளின் தொகுப்பே மூளை .

மூளை:
1. பெரு மூளை

2. சிறு மூளை

3. முகுளம் 

தண்டுவடம் மூளையோடு இணைந்து இருக்கும் பகுதி 

இனப்பெருக்க மண்டலம்  

(Reproductive system)

reproduct.png

தன்  இனத்தை பெருக்குவதற்கான உயிரியல் செயலே இனப்பெருக்கம்    

வகைகள்:
1. பால் இனப்பெருக்கம் (Sexual)
2. பாலிலா இனப்பெருக்கம் (Asexual)

ஆண் இனப்பெருக்க உறுப்புகள்:
1. ஆணுறுப்பு

2. விதைப்பைகள் 
3. விந்து திரவம்

4. ப்ராஸ்டேட் சுரப்பி 

 பெண் இனப்பெருக்க உறுப்புகள்:
1. பெண்ணுறுப்பு

2. சினைப்பைகள்

3. கருக்குழாய்கள்

4. கர்ப்பப்பை 

உயிர் சக்தி 

(Life force) 

உயிர் சக்தி 

உயிர் சக்தியை பற்றிய புரிதலே ஒருங்கிணைந்த உடலியலின் அடிப்படை படி.

1. அக உயிர் சக்தி  

  • பிறப்பு முதலே நமக்குள் இருப்பது  

  • கூட்டவும் முடியாது

  • குறைக்கவும் முடியாது

2. புற உயிர் சக்தி

  • உணவு 

  • காற்று

  • நீர்

  • பிரபஞ்ச சக்தி  

புற உயிர் சக்தியின் ஏழு நிலைகள் 

WhatsApp Image 2020-08-22 at 1.32.18 PM.
Dige.jpg
  • YouTube
  • Facebook

உடலியல்

(ANATOMY)

(NATURAL CURE FOR ALL DISEASES - INDIAN CLASSICAL ACUPUNCTURE)

body.jpg
  • White Facebook Icon
  • White Twitter Icon
  • White Pinterest Icon
  • White Instagram Icon
bottom of page