பல் வலி, ஈறு வலி மற்றும் வாய் துர்நாற்றம் பிரச்சினைக்கான சில முக்கிய குறிப்புகள்
- Nandhakumar MK - MK Holistic Health
- Sep 6, 2020
- 2 min read
Updated: Sep 8, 2020

பொதுவாக பல் மற்றும் பல் ஈறுகளில் வலிகள் வந்தால் உயிர் போகும் அளவிற்கு வலிக்கும். அதனால் நாம் மெடிக்கல் சாப் சென்று ஏதாவது மாத்திரை ஒன்றை வாங்கி வந்து வலியை போக்கிக் கொள்வோம்.
இருந்தாலும் பல நேரங்களில் பல் வலியின் தீவிரமும், ஈறு வீக்கமும் குறையாது. மேலும் செயற்கையான மருந்து, மாத்திரைகள் பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
இதற்கான சில இயற்கையான தீர்வுகளை இங்கே பார்ப்போம். வாருங்கள்.

1. ஒரு தம்ளர் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து 3 வேளை உணவுக்கு முன்னும் பின்னும் வாய் கொப்பளித்து வாருங்கள்.

2. சிறிதளவு புளி மற்றும் சிறிதளவு கல் உப்பை பொடியாக்கி இரண்டையும் சேர்த்து வாயில் (பாதிக்கப்பட்ட ஈறில்) வைத்து சிறிது நேரம் அழுத்தம் கொடுத்து தேய்க்கும் பொது வீக்கம் படிப்படியாக குறையும்.

3. உங்களின் வாயில் புளிப்புத்தன்மை அதிகமாக நீங்கள் உணர்ந்தால் மட்டும் ஒரு தம்ளர் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு மட்டும் சேர்த்து 3 வேளை உணவுக்கு முன்னும் பின்னும் வாய் கொப்பளித்து வாருங்கள்.

4. நம் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு எண்ணெய் (நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்) மூலம் காலை மற்றும் இரவு தூங்கும் முன் 15 நிமிடம் வரை வாய் கொப்பளித்து விட்டு தூங்க செல்லலாம். பல் வலி மற்றும் வாய் துர்நாற்றம் குறையும்.

5. கூடுதலாக புளிப்பு தன்மையுள்ள உணவுகளை (அமிலத்தன்மையுள்ள) கண்டிப்பாக தவிர்க்க (குறைக்க) வேண்டும்.

6. இந்த நேரத்தில் இனிப்பு பண்டங்களையும் குணமாகும் வரை கண்டிப்பாக தவிர்க்க (குறைக்க) வேண்டும். இவை உடலுக்கு புளிப்புத்தன்மையை அதிகரித்து நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும்.

7. பால் கலந்த தேநீர் மற்றும் காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும்.

8. மேலும் நீர் தன்மையுள்ள மற்றும் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை மட்டும் தான் இந்த காலத்தில் எடுக்க வேண்டும். புளிப்பு தன்மை குறைவாக உள்ள பழைய சோறு உடம்புக்கு உகந்தது.

9. பற்களின் உறுதி தன்மைக்கு கொய்யா மற்றும் ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம் சில நேரங்களில் செரிமான பிரச்சினையை அதிகரித்து விடும். எனவே வாழைப்பழம் அதிகம் வேண்டாம். செவ்வாழை எடுத்துக் கொள்ளலாம்.

10. உடலுக்கு தேவையான உயிர்ச்சத்து (வைட்டமின்) மற்றும் தாதுஉப்புகள் கிடைக்காத போது உடலின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே தேவையான ஊட்டச்சத்துக்களை பழங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக பேரிச்சை பழம் மற்றும் தேன் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்து மற்றும் தாதுஉப்புகளை (மினரல்ஸ்) கொடுக்கிறது.

11. பல் வலி மிதமாக இருந்தால் இரவில் மட்டும் பாலுடன் பேரிச்சை பழம், மஞ்சள் மற்றும் மிளகு கலந்து எடுத்துக் கொள்ளலாம். பாக்கெட் பாலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பசு மாட்டு பால் சிறந்தது. கண்டிப்பாக எருமை மாட்டு பால் எவரும் அருந்த கூடாது. சில நேரங்களில் பால் ஒரு சிலருக்கு செரிமான பிரச்சனை ஏற்படுத்தும்.

12. பொதுவாக வயிற்றில் இருக்கும் பிரச்சினை தான் பல் வலி மற்றும் ஈறு வலி மற்றும் வாய் துர்நாற்றம் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.

எனவே வயிற்றிற்கு தேவையில்லாத மசாலா உணவுகளையும், கார உணவுகளையும் தரக் கூடாது.

13. குணங்களில் அதீத பயம், காமம், குரோதம் ஆனது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்கின்றது. ஏனென்றால் சிறுநீரகம் தான் உடலின் எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கின்றது .
எனவே "எண்ணத்தில் தூய்மை" அவசியமாகிறது.

14. பொதுவாக நிலத்தின் உறுதித் தன்மை குறையும் போது தான் மரமானது உறுதி தன்மையை இழந்து வீழ்ந்து போகும். நிலத்தின் உறுதி தன்மைக்கு நீர் (மினரல்ஸ்) அவசியம் ஆகிறது.
அதுபோல நாமும் நம்முடைய நில மூலகமான மண்ணீரல் மற்றும் வயிற்றை பாதுகாக்கும் செயல்களை செய்யும் போது, நமது உடலின் பற்களின் அரோக்கியமும் மேம்படும்.
எனவே உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் (மினரல்ஸ்) அதிகம் உள்ள பானை தண்ணீர் கொடுப்பது ஆகச்சிறந்தது.

15. இரவில் கண்டிப்பாக கல் உப்பு அல்லது மூலிகை பற்பொடி மூலம் பற்கள் மற்றும் ஈறுகளை அழுத்தி (கை விரலால்) துலக்கிவிட்டு பிறகு தான் தூங்க (9.30 PM ) செல்ல வேண்டும்.

https://www.healernandhakumar.com/post/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%88%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA?fbclid=IwAR10kxKBLS3FwRsyxYw_qcdpSdqr0hkSPL6EEETG1tNo0yoUqvapQS5C1Ss
விருப்பத்துடன் இருங்கள். விரைவில் நலம் அடைவார்கள்.
உங்களின் பிரியமானவர்களுக்கு இந்த தகவல்களை பகிருங்கள்.
www.healernandhakumar.com
நன்றி,
நந்தகுமார் (அக்கு ஹீலர்)
எண்ணம் போல் வாழ்க்கை
(+91 8667672900)
மேலும் பல தகவல்களை நமது YOUTUBE சேனலில் (MK HOLISTIC HEALTH) பதிவிடுகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள் (SUBSCRIBE OUR CHANNEL )
1. YouTube: https://www.youtube.com/channel/UCWTK_4gYTkJTQIvVtF6_9nQ
2. WebSite: https://www.healernandhakumar.com
3. FaceBook: https://www.facebook.com/MK-Holistic-Health-105876354292823/
4. WhatsApp: https://chat.whatsapp.com/EJ9nNGYFF414zkqH2BKTgk

Comments