மணிப்பூர் சம்பவம் உலக மக்களுக்கான ஓர் எச்சரிக்கை!
- Nandhakumar MK - MK Holistic Health
- Jul 29, 2023
- 2 min read
Updated: Jul 31, 2023
ஒவ்வொரு காலங்களிலும் இந்த பிரபஞ்சம் ஆனது குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித இனத்திற்கு தனது எச்சரிக்கையை கொடுத்து கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் மணிப்பூரில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம் அரங்கேறிய காணொளி வெளியாகி உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு தான் இந்த விழிப்புணர்வு பதிவு.
முன்னதாக மணிப்பூரை சார்ந்த இரண்டு இன மக்களுக்கு இடையே பன்னெடுங்காலமாக பகை உணர்வு இருந்து வந்துள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் ஒரு இன மக்கள் தங்களின் பெண்ணை மானபங்கம் படுத்தியதாக வந்த பொய்யான WHATSAPP வதத்தியால் கோபம் கொண்ட இன்னொரு இன குழிவினர் (நூற்றுக்கணக்கானோர்) கோபம் கொண்டு மலை வாழ் மக்களின் ஊரில் கலவரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கலவரத்தில் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டும், பலர் கொல்லப்பட்டும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளனர்.
இந்த சம்பவம் மக்களிடத்தில் மனிதநேயம், உயிர்ம நேயம் குறைந்து சாதி, மத, இன வெறி அதிகமாகி வருவதை பறைசாற்றுகிறது.
எந்த ஒரு விஷயத்தின் மீதான அன்பும் அளவுக்கு அதிகமாகும் போது பற்றாக மாறுகிறது. அந்த பற்று அதிகமாகும் போது வெறியாக மாறுகிறது.
அந்த வெறியானது நல்லது எது கெட்டது எது என்பதை பகுத்து ஆராயாமல் பெருமைக்காக எந்த எல்லைக்கும் மனதை கொண்டு சென்று தீய செயல்களை செய்ய வைக்கிறது.
அப்பாவி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி பல வகைகளில் ஆதாயம் தேட முயலும் தீய சிந்தனை கொண்டவர்களிடம் இன்றைய இளைஞர்கள் சிக்காமல் இருக்க வேண்டும்.
அன்பையும், அறத்தையும், ஆன்மீகத்தையும் போதிக்கும் நம் பாரத நாட்டிலும், உலகமெங்கிலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க வேண்டும்.
சாதி, மதம், இனம், மொழி, நிறம் என அனைத்தும் கடந்து அனைவரையும் எந்த வித நிபந்தனையில்லாமல் அனைத்து சமூகத்தினரையும் நேசிக்கும் குணத்தை உலக மக்கள் பெற வேண்டும்.
இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது என்பதை உணர வேண்டும்.
அணுகுண்டுகளை விட மோசமானது ஒரு சமூகத்தின் மீதான வெறுப்புணர்வு.
ஒரு இனத்தின் மேல் பற்று, பெருமை அதிகமாக அதிகமாக மற்ற இனத்தின் மேல் வெறுப்புணர்வு உங்களை அறியாமல் உருவாகிறது.
இவை சாதி, மதம், மொழி மற்றும் நிறம் அனைத்திற்கும் பொருந்தும்.
இன்றைய சமூகத்தினர் உண்மையான மகிழ்சசியை தூய அன்பில், கருணையில் பெறுவதை விட பிறரை வெறுப்பதில் இருந்தும் கேலி, கிண்டல் மற்றும் பழிவாங்குதலில் இருந்தும் தற்காலிக மகிழ்சசியை பெறுகின்றனர்.
இந்த உலகம் அழிய அணுகுண்டுகள் கூட தேவையில்லை, ஒருவனுக்கு பிற சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்து விட்டால் போதும்.
பற்றை துறப்பதே துன்பத்தில் இருந்து விடுபட ஒரே வழி.
இன்றைய கால தேவை மனித நேயம் கடந்த உயிர்ம நேயம்.
அனைத்து உயிர்களையும் நேசிக்கும் நிலையை எட்டினால் தான் அனைத்து மனிதர்களையும் நேசிப்போம்.
உண்மையில் மனிதம் விரும்புவது அமைதியும் சமாதானமும்..
நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!
சிந்தனை போல் வாழ்க்கை!
என்றும் மக்கள் நலனில் சமூக அக்கறையுடன்..
உங்கள் நண்பன்
நந்தகுமார் (ஹீலர்)
Commentaires