சோதனையில் உள்ள தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயப்படுத்துவது பெரும் கொடுமை.
- Nandhakumar MK - MK Holistic Health
- Jan 15, 2022
- 2 min read

கோ*னா வந்து 10 மாதத்தில் கண்டறிந்த நோயை குணப்படுத்தாத, நோயை தடுக்காத, நோயை பரப்பும் தடுப்பூசியை (தடுக்கா ஊசியை) விருப்பம் உள்ளவர்கள் போட்டு கொள்ளட்டும். விரும்பாதவர்களை கட்டாயப்படுத்த கூடாது.
முதலில் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை என்று கூறினார்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊசியை போட்டால் போதும் என்றும், பிறகு படிப்படியாக குறைத்து 15 வயது குழந்தைகள் வரை கட்டாயம் போட அவசியம் என்ன?
இயற்கை வாழ்வியலை விரும்புபவர்களை விட்டு விடுங்கள்.
ஆரம்பத்தில் பூச்சை ஒழிக்கிறோம், விளைச்சலை பெருக்குகிறோம் என்று கொண்டு வந்த இரசாயன பூச்சி கொல்லிகள், விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் தான் இன்றைய மக்களின் நோய்களுக்கு ஒரு காரணமாக அமைகிறது.

அதை போல் சோதனையில் உள்ள தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது பிற்காலத்தில் மனித குலம் மாற்ற முடியாத பிழையை செய்ய வாய்ப்பு உள்ளது.
கட்டாய தடுப்பூசியை மக்களின் மருத்துவ சுதந்திரத்தை பரிக்கின்றது.
ஒருவர் செயற்கை விவசாயம் செய்ய வேண்டுமா? அல்லது இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமா என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதை போல் எந்த மருத்துவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மக்களுடைய தனிப்பட்ட விருப்பம்
முதல் அலையில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மாற்று மருத்துவத்தை நாடிய அரசு மக்களின் உடல் நிலையில் நல்ல முன்னேறம் இருந்தும் அதை கை விட்டது ஏன்?

அனைவரையும் காப்பாற்றிய பாரம்பரிய மருத்துவத்தை விடுத்து இறப்பு விகிதம் அதிகம் ஏற்படுத்திய ஆங்கில மருத்துவத்தை அரசு ஏன் தேர்ந்தெடுத்தது? இவற்றை 15 வயது குழந்திங்க்ல வரை கட்டாயம் போட அவசியம் என்ன?
தடுப்பூசி போட விருப்பம் இல்லாத மாணாக்கர்களை தேர்வு எழுத விட மாட்டோம் என்று ஆசிரியர்கள் மிரட்டுவது ஏன்?
ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கும் பதின்பருவ மாணாக்கர்களுக்கு இந்த சோதனை ஊசி அவர்களின் மரபணுவை மாற்றாது என்று உறுதி அளிக்க முடியுமா?

சரி, ஒரு தடுப்பூசி வந்தால் அதை பல ஆண்டுகள் (10 ஆண்டுகள்) சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆங்கில மருத்துவ ;பாடம் அல்லது மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். எவ்வாறு 10 மாதத்தில் கண்டுபிடித்து உலகம் முழுதும் கட்டாயப்படுத்த முடியும். (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பின் தான் ஊசியின் நன்மை தீமைகள் தெரியும் என்பது ஆங்கில மருத்துவத்தின் கருத்து)
மக்கள் அனைவருக்கும் ஊசியை போட்டு விட்டால் இந்த ஊசி பலனை அளித்தது என்று யாருடன் ஒப்பீடு செய்வீர்கள். (MBBS மருத்துவர்கள் முன் வைக்கும் கேள்வி - கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது )
தடுப்பூசியை முதலில் எதிர்ப்பது ஆங்கில மருத்துவம் சரியாக படித்த மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தான் (கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது).
ஆனால் நாங்கள் கேட்பதோ கட்டாய தடுப்பூசியை திணிக்க வேண்டாம் என்று தான்
மேலும் தடுப்பூசியால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசோ, தடுப்பூசி வழங்கும் நிறுவனமோ பொறுப்பு கிடையாது என்று எழுதி கையொப்பம் வாங்கிவிட்டு தடுப்பூசி கட்டாயம் என்றால் எப்படி?

உண்மையில் இந்திய சட்டத்தில் தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று இருக்கின்றது. ஆனால் அவற்றை அரசாங்கம் கணக்கில் எடுத்து கொள்வதில்லை. இந்த சோதனை தடுப்பூசியை அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மால்கள், இரயில் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் / நிறுவனங்களில் கட்டாயப்படுத்தி உள்ளது ஏற்றுக் கொள்ள முடியாது.
இதன் உண்மை தன்மையை பேசினால் அவரவர் துறையில் பிரச்சினைகள் வரும் என்பதாலேயே எவரும் முன் வந்து பேச தயங்குகிறார்கள்.
எண்ணம் போல் வாழ்க்கை
என்றும் மக்கள் நலனில் சமூக அக்கறையுடன்..
உங்கள் நண்பன்
நந்தகுமார் (ஹீலர்)
BE (Mech), BSS D.(Acu), PGD (Y&N), MA (Astro)
(+91 8667672900)
留言