top of page
Search

கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் மரணம் உணர்த்தும் செய்தி என்ன?

  • Writer: Nandhakumar MK - MK Holistic Health
    Nandhakumar MK - MK Holistic Health
  • Dec 31, 2023
  • 2 min read

கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் மரணம் உணர்த்தும் செய்தி



புரட்சி கலைஞர், கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன் என மக்களால் அழைக்கப்படும் நடிகர் மற்றும்  அரசியல் கட்சி தலைவருமான திரு. விஜயகாந்த்  அவர்களுக்கான  இரங்கல் + மக்களுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு.



கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.


அவருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கல்! அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்!!


முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமையன்று மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் சிகிச்சை பலனின்றி (28-12-2023) அன்று காலை 6.10 மணிக்கு காலமானார். நேற்று முன்தினம்  (29-12-2023) அன்று உடலானது அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அவருக்கு பொது மக்கள்+ரசிகர்கள்+அரசியல் கட்சியினர் என பல லட்சக்கணக்கானோர் சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.


அரசியலில் மிக குறைந்த வாக்கு சதவீதம் வைத்துள்ள ஒருவருக்கு எப்படி இந்த அளவிற்க்கான மக்கள் செல்வாக்கு இன்னமும் இருக்கிறது என்று பலர் ஆச்சர்யம் அடைந்தனர்.


முன்னதாக மிகப்பெரும் ஆளுமைகள் அரசியலில் இருக்கும் போதே மக்களுக்கு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வந்தவர்களின் கேப்டன் விஜயகாந்த அவர்களை முக்கியமானவர்.


ஆரம்ப காலத்தில் வெகு சில ஆண்டுகளில் 10 சதவீதம் வரை வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றார்.


பின்னாளில் உடல்நல குறைவு  + நிதி பிரச்சினை காரணமாக அரசியலில் ஆளுமையை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.


பெரும்பாலும் அனைத்து கட்சியினரும் விஜயகாந்த அவர்களை எதிரியாக பார்ப்பதில்லை. அவரை ஆகச்சிறந்த மனிதர் என்றே கூறி வருகின்றனர். காரணம் அவரின் இயல்பான + உண்மையான, நேர்மையான சிந்தனை+பேச்சு+செயல் ஆகும். அவரின் தானம்+தர்ம சிந்தனை. அனைவரிடமும் எளிமையாக பழகும் தன்மை போன்ற நற்குணங்கள் ஆகும்.


உணர்ச்சி மிகுந்த கோபம் என்ற ஒரு குணம் ஒன்றை தவிர்த்து பார்த்தால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உண்மையில் ஆகச்சிறந்த மனிதர் தான்.


அரசியலில் இயல்பான பேச்சு + உண்மை + நேர்மை +உரிமையான கண்டிப்பு இருந்ததாலோ அல்லது அரசியலில் நடிக்க தெரியாததாலோ, எதிரிகளாலாளோ / துரோகத்தாலோ, தன் உடல்+மனதை பெருதும் கவனிக்காமல் இருந்ததாலோ அரசியல் வாழ்க்கையில் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.


பணத்திற்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களுக்காக தானம்+தர்மம் செய்வதையும் தனது வாழ்நாளில் முழுதுவதும் பழக்கம்+வழக்கமாக கொண்டிருந்தார்.


கோடிக்கான மதிப்புள்ள சொத்துக்கள் + பணங்கள் இழப்பு ஏற்பட்ட போதும் சிறிதும் மனம் தளராமல் மக்களுக்கு உண்மையில் நல்லது வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்த மாமனிதர்.


எதிரிகளை / துரோகிகளை மன்னிக்கும் குணம் உள்ளவர். தவறை நேருக்கு நேர் சுட்டி காட்டி நியாயம் கேட்கும் துணிச்சல்காரர்.


ஒருவர் உண்மையில் நல்ல மனிதர் தான் என்பது அனைவரிடமும் சாதி, மதம், இனம், மொழி, நிற பாகுபாடின்றி இயல்பாக, பேசும், பழகும் குணத்தை வைத்தும், செயலின் வெளிப்படைத்தன்மையை வைத்தும், பிறருக்கும் உதவ வேண்டும் என்ற பொதுநல சிந்தனை வைத்தும், தான, தர்ம சிந்தனை வைத்தும், யாருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்கத்தை வைத்தும், சில இடத்தில் வெகுளியான குழந்தை தன்மை கொண்ட குணத்தை வைத்தும், அனைத்திலும் உண்மை, நேர்மையாக இருப்பதையும், பொறுமையை கையாள்வதில் இருந்தும், தேவையின்றி அதிகம் கோவம் கொள்ளாமல் பிரச்சினையை கையாள்வதில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.


இவற்றில் பொறுமையாக ஒரு பிரச்சினையை கையாள்வது + கோவம் கொள்ளாமல் இருப்பது இரண்டையும் மட்டும் விலக்கி வைத்து விட்டு பார்த்தால் மற்ற பல்வேறு நற்குணங்களில் கேப்டன் விஜயகாந்த அவர்கள் உயர்ந்து நிற்கிறார்.


எந்த ஊடகங்கள் அவரை தூற்றியதோ, கிண்டல் செய்ததோ அதே ஊடகங்கள் அவரை இப்போது உயர்த்தி பேசுகின்றன.


"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்"


அவர் மறைந்தாலும் அவரின் நற்காரியங்கள் + நற்கருத்துகள் + நற்குணங்கள் மூலம் அவரின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்.


அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்!!


எத்தனை கோடி சொத்துக்கள் சேர்த்தாலும் நாம் செய்த பாவ, புண்ணியங்கள் தான் நம் கூட வரும்.


நாம் செய்த நற்காரியங்கள் + நற்கருத்துகள் தான் இந்த பூமியில் அடுத்த தலைமுறைகளிடம் நிலைத்து நிற்கும்.


நாம் வாழ போகும் இந்த சொற்ப காலத்தில் அனைத்து விஷயத்திலும் உண்மையாக, நேர்மையாக இருப்பதும், சாதி, மத, இன, மொழி, நிற வேற்றுமைகள் பாராமலும் அனைவரிடமும் சமமாக பழகுதலும், தன் தேவைக்கு அதிகமானதை பிறருக்கு கொடுத்து வாழ்வதும், முடிந்த அளவு தான, தர்ம காரியங்கள் செய்தும், எண்ணம், சொல், செயலில் மனதளவிலும் யாருக்கும் துன்பம் /துக்கம் கொடுக்காமல் இருப்பது என்பது நம் அனைவரின் அமைதியான, ஆரோக்கியமான, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும் என்பதை உணரும் தருணம்.


நாளை பிறக்கும் 2024 புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் செழுமையை கொண்டு வரும் இனிதான புதிய தொடக்கமாக இருக்கட்டும்.


நன்றி,


இந்த உலகம் அனைவருக்குமானது!


சிந்தனை போல் வாழ்க்கை!


என்றும் மக்கள் நலனில் சமூக அக்கறையுடன்..


உங்கள் நண்பன்

நந்தகுமார்

 
 
 

Comentarios


bottom of page