அஞ்சறைப்பெட்டியும் உடல் ஆரோக்கியமும். அஞ்சறைப்பெட்டிக்கு அஞ்சறை பெட்டி என ஏன் பெயர் வந்தது? Secret
- Nandhakumar MK - MK Holistic Health

- Aug 27, 2020
- 1 min read
#அஞ்சறைப்பெட்டியும்_உடல்_ஆரோக்கியமும் #Anjaraippetti_Secret #Turmeric #Cumin #Fenugreek #Mustard #Pepper #Heart #Spleen #Lung #Kidney #Liver #PHvalue #Enemy #BodyHeat #ஆரோக்கியமே_ஆனந்தம்
கேள்வி அஞ்சறைப்பெட்டிக்கு அஞ்சறை பெட்டி என ஏன் பெயர் வந்தது?
பதில் 1: ஆரம்ப காலத்தில் சமையலுக்கு பயன்படும் அஞ்சறைப் பெட்டியில் ஐந்து அறைகள் இருந்ததால் அவை ஐந்தரை பெட்டி என அழைக்கப்பட்டது.
பதில் 2: இந்த அஞ்சறை பெட்டியில் வைக்கும் (பயன்படுத்தும்) முக்கியமான பொருட்கள் அஞ்சறை உறுப்புகளை பாதுகாக்கின்றன. அதாவது பஞ்சபூத உறுப்பான மண்ணீரல் (நிலம்), நுரையீரல் (காற்று) சிறுநீரகம் (நீர்), கல்லீரல் (ஆகாயம்), இதயம் (நெருப்பு) ஆகிய உறுப்புகளை பாதுகாக்கின்றன.
எனவே இவற்றிற்கு அஞ்சறைப்பெட்டி என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
நமது உடலின் ஆரோக்கியம் சமையல் அறையில் தீர்மானிக்கப்படுகிறது.
சமையலின் (உணவின்) ஆரோக்கியம் மற்றும் சுவை அஞ்சறைப்பெட்டியில் தீர்மானிக்கப்படுகிறது.
அஞ்சறைப் பெட்டியில் பஞ்ச பூத பொருட்கள்:
1. நிலம் (மண்ணீரல்) : மஞ்சள்
2. காற்று (நுரையீரல்): சீரகம்
3. நீர் (சிறுநீரகம்): வெந்தயம்
4. ஆகாயம் (கல்லீரல்): கடுகு
5. நெருப்பு (இதயம்): மிளகு
தினமும் 10 மிளகு சாப்பிட்டால் எதிரி வீட்டுக்கும் செல்லலாம் என்பது பழமொழி.
அகத்தை சீராக்கும் சீரகம்.
சீரகம் = சீர் + அகம்
உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.
இன்றைய காலத்தில் உடலுக்கு நன்மை தரும் சமையலுக்கு பயன்படும் பல்வேறு நறுமணப் பொருட்கள் வைக்க ஐந்திற்கும் மேற்பட்ட அறைகளுடன் அஞ்சறைப்பெட்டி பயன்பாட்டில் உள்ளது.
நோயுற்ற காலங்களில் அஞ்சறைப் பெட்டியில் உள்ளவற்றை பயன்படுத்தி தேநீர், இரசம் போன்றவற்றை சமைத்து சாப்பிட்டால் நம் உடலில் உள்ள பிணி நீங்கும்.
அஞ்சறைப் பெட்டியில் உள்ளவற்றை சாதாரண நாட்களில் அளவாக பயன்படுத்த வேண்டும். நோயுற்ற நாட்களில் அதிகம் பயன்படுத்தலாம்.
உடலில் (இரத்தத்தில்) அமிலத்தன்மை அதிகரிக்கும் பொழுது நமக்கு நோய்கள் வருகின்றன.
அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் உடலின் (இரத்தத்தின்) காரத்தன்மையை அதிகரிக்கின்றன.
இரத்தத்தின் PH அளவு: 7.4 (காரத்தன்மை).
(PH அளவானது 7 க்கு மேல் இருந்தால் அது காரம் எனப்படும்
PH அளவானது 7க்கு கீழ் இருந்தால் அது அமிலம் எனப்படும்)
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் PH அளவு மாறுபடும்.
பசித்த வயிறு காரத்தன்மை ஆகும்.
ஆரோக்கியமே ஆனந்தம்!
இறைநிலையே பேரானந்தம்!!
https://youtu.be/oRTUG5bpa_0
நன்றி,
நந்தகுமார் (அக்கு ஹீலர்)
எண்ணம் போல் வாழ்க்கை
(+91 8667672900)







Comments