top of page
Search

நடிகர் விவேக் அவர்களின் மரணம் உணர்த்தும் செய்தி என்ன?

  • Writer: Nandhakumar MK - MK Holistic Health
    Nandhakumar MK - MK Holistic Health
  • Apr 17, 2021
  • 3 min read

Updated: Jul 6, 2021

ஒவ்வொரு காலங்களிலும் இந்த பிரபஞ்சம் ஆனது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு செய்தியை இவ்வுலக மக்களுக்கு உணர்த்துகிறது.


அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு தான் இந்த விழிப்புணர்வு பதிவு.


#நடிகர்_விவேக்_அவர்கள்_உணர்த்திய_பாடம் #விவேக்கின்_மரணம் #விவேக்கின்_மரணத்திற்கான_காரணம் #விழிப்புணர்வு #விவேக்_மக்களுக்கு_ஏற்படுத்திய_விழிப்புணர்வு #விவேக்_மக்களுக்கு_கொடுத்த_செய்தி


ஜனங்களின் கலைஞன், சின்ன கலைவாணர் திரு. விவேக் அவர்கள் நேற்று (16-04-2021) மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (17-04-2021) காலை 4.35 மணியளவில் உயிர் இழந்தார்.


ஆழ்ந்த இரங்கல்! அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்!!

ree

முன்னதாக 15-04-2021 அன்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு மக்களுக்கு ஊடகத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


ஆனால் இன்றோ மருத்துவர்கள், ஊடகங்கள் மற்றும் அரசாங்கமோ தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும், இறப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகின்றார்கள்.


பொதுவாக மனித உடல் என்பது பொருள் வடிவமும், சக்தி நிலையும் ஒருங்கே இணையப் பெற்ற இயற்கையான பஞ்ச பூதங்களின் கூட்டு சேர்க்கை ஆகும்.

ree

எனவேதான் இந்த உடலானது இயற்கையான உணவுகளையும், மருந்துகளையும் கொடுக்கும் போது அவை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்ளும்.


ஆனால் அவை செயற்கையான அல்லது இரசாயன உணவுகளாகவோ, மருந்துகளாகவோ இருக்கும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு பொருள் தன்னுள் நுழைந்து விட்டதாக எண்ணி சில வேதியியல் மாற்றங்களை செய்து உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை மட்டும் (பிரித்து) ஏற்றுக் கொண்டு மற்றவற்றை சிறுநீர், மலம் கழிப்பதன் மூலமாகவோ அல்லது வியர்வை மூலமாகவோ வெளியேற்றும். (இயற்கையான கழிவுகளும் இதில் அடங்கும் )


ஆனால் அதுவும் அவைகள் ஒவ்வொருவரின் உடல் (உயிர்) ஆற்றலை பொறுத்து அமைகின்றது.


தடுப்பூசிகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது என்பது உண்மை தான். பொதுவாக உலகத்தில் தோன்றும் அனைத்து நோய் கிருமிகளும் இயற்கையான தடுப்பூசி தான் என்பதை மருத்துவ உலகத்தை சார்ந்தவர்கள் அறிவர்.


உதாரணத்திற்கு தடுப்பூசி போட்ட பின் வரும் அறிகுறிகளும் (காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவை) சாதாரண வைரஸ் காய்ச்சலின் போது வரும் அறிகுறிகளும் ஒன்றே. அவர்களின் மருந்தினால் காய்ச்சல் வந்தால் நல்லது, தானாக வந்தால் கெட்டதா? (உண்மையில் உடலை விட சிறந்த மருத்துவர் உலகில் கிடையாது).

ree

எந்தெந்த தருணங்களில் மருத்துவமனையை நாட வேண்டும் என்ற புரிதல்களை இன்றைய நவீன மக்கள் அறிந்து வைத்திருக்கவில்லை.


அதே சமயம் தடுப்பூசிகள் ஆயிரத்தில் / லட்சத்தில் ஒருவருக்கு தீவிர உடல் உபாதைகள் ஏற்படுத்தும் என்பதையும், மேலும் மரணம் வரை கொண்டு செல்லும் என்பதையும் மருத்துவ உலகம் நன்கு அறியும்.


இதற்கு காரணம் தடுப்பூசியில் இருக்கும் அதிகப்படியான செயற்கையான பஞ்சபூத கூட்டு சேர்க்கை ஆகும்.


ஏற்கனவே நாம் உண்ணும் உணவிலும், அருந்தும் நீரிலும் நஞ்சு கலந்து விட்ட சூழ்நிலையில் அந்த நச்சுகளை (செயற்கை இரசாயனங்கள்) நீக்கும் பணியையும் செய்து விட்டு மேலும் நாம் செயற்கையான மருந்து மாத்திரைகள், ஊசிகள் அதிகம் பயன்படுத்தும் போது உடலானது பலவீனம் அடைகிறது.

ree

சென்ற ஆண்டு (2020) இயற்கை வைத்தியத்தை (கபசுர குடிநீர்) முன்னிறுத்திய அரசாங்கம் இந்த முறை (2021) தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்று கூறுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும். இந்த நோய்க்கு இயற்கை மருத்துவத்தை விரும்புபவர்களை அரசானது ஆங்கில மருத்துவத்திற்கு திருப்ப முயற்சி செய்யக் கூடாது.

ree

அரசாங்கமானது இயற்கையான முறையில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான வழி முறைகளையே மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால் அவையே பக்க விளைவுகள் அற்றதும், நிரந்தரமான தீர்வும் ஆகும்.


இதை செய்யாது விடுத்தால் உலகம் இனி எதிர்காலத்தில் அனைத்து கிருமிகளை கண்டு அஞ்சி இரசாயன மருந்துகளை அதிகம் (காலம் முழுதும்) உட்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

ree

பன்னெடுங்காலமாக இருந்த ஒரு வைரசை (கொ*னா) பிரபலங்களை வைத்து மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி தடுப்பூசியை போட சொல்ல வேண்டிய கட்டாயம் ஏன் உள்ளது?


சிறிதளவு இரசாயனங்கள் கலந்த காய்கறிகள் மற்றும் பழங்களே உடலுக்கு தீமை செய்ய முடியும் என்றால் 100 சதவீதம் செயற்கையான இரசாயன மருந்துகள், ஊசிகள் உடலுக்கு எப்படி நன்மையான விளைவை கொடுக்கும்.


மேலும் முகக்கவசத்தால் ஏற்படும் பாதிப்பை பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை? முகக்கவசம் அதிக நேரம் அணிவதால் கெட்ட காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் நிலை ஏற்படும். மேலும் உள்ளிழுக்கும் மொத்த (நல்ல) காற்றின் அளவும் குறையும். உடலின் அன்றாட பணிகளுக்கு கூட போதுமானதாக இருக்காது. இவை பின்னாளில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணமாக அமையும்.


(சில நாடுகளில் மக்கள் முகக்கவசத்தை எதிர்த்து போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது - நம்ம ஊர் ஊடகங்களில் இது பற்றிய செய்தி வரவில்லை)

ree

குறிப்பாக தடுப்பூசி போடுவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது.


தடுப்பூசியால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசோ, தடுப்பூசி வழங்கும் நிறுவனமோ பொறுப்பு கிடையாது என்று எழுதி கையொப்பம் வாங்கிவிட்டு தடுப்பூசி கட்டாயம் என்றால் எப்படி?


உண்மையில் இந்திய சட்டத்தில் தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று இருக்கின்றது. ஆனால் அவற்றை அரசாங்கம் கணக்கில் எடுத்து கொள்வதில்லை.

ree

குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை தடுப்பூசி போட சொல்லி கட்டாயப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது.


இதன் உண்மை தன்மையை பேசினால் அவரவர் துறையில் பிரச்சினைகள் வரும் என்பதாலேயே எவரும் முன் வந்து பேச தயங்குகிறார்கள்.


காலம் நடத்தும் நாடகத்தை நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.


தீதும் நன்றும் பிறர் தர வாரா.


நடப்பவை அனைத்தும் நன்மைக்கே.


காலம் உணர்த்தும் செய்தி அவரவர் பார்வையில் மாறுபடும்.

ree

எண்ணம் போல் வாழ்க்கை


என்றும் மக்கள் நலனில் சமூக அக்கறையுடன்..

உங்கள் நண்பன்


நந்தகுமார் (ஹீலர்)

BE Mech., BSS D.Acu., PGD (Y&N)

(+91 8667672900)



https://www.healernandhakumar.com/post/நட-கர-வ-வ-க-அவர-கள-ன-மரணம-உணர-த-த-ம-ச-ய-த-என-ன


மேலும் பல தகவல்களை நமது YOUTUBE சேனலில் (MK HOLISTIC HEALTH) பதிவிடுகிறேன்.தொடர்ந்து இணைந்திருங்கள்.

1. Youtube: https://www.youtube.com/channel/UCWTK_4gYTkJTQIvVtF6_9nQ


2. Website: https://www.healernandhakumar.com


3. Facebook: https://www.facebook.com/MK-Holistic-Health-105876354292823/

 
 
 

Comments


bottom of page