பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கான சில முக்கிய தீர்வுகள்
- Nandhakumar MK - MK Holistic Health

- Sep 2, 2020
- 2 min read
Updated: Sep 11, 2023

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! "
" பெண்ணாய் பிறப்பது பெருமையே!"
ஆம் உண்மை தான்.
ஆனால் நம் வீட்டு பெண்கள் (தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள், தோழிகள்) படும் வேதனையை பற்றி ஆண்கள் எந்த அளவில் தெரிந்து வைத்து உள்ளோம் என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பருவம் அடைந்தது முதல் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அனுபவிக்கும் தசைப்பிடிப்பு, இரத்த போக்கு, வயிற்று வலி போன்றவை ஒரு சிலருக்கு மிக அதிகமாகவே இருக்கும்.

பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கான சில முக்கிய மற்றும் எளிமையான தீர்வுகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்!
1. மாதுளம் பழத்தை அதனுள் உள்ள மஞ்சள் தோலுடன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு நீர் அருந்திய பின் 30 - 45 நிமிடம் கழித்து சாப்பிட்டு வர சொல்லுங்கள்.

2. தினமும் உலர்ந்த அத்தி பழம் அல்லது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு நீர் அருந்திய பின் 30 - 45 நிமிடம் கழித்து சாப்பிட்டு வர சொல்லுங்கள்.

3. ஒரு கைப்பிடி புதினாவை எடுத்து மிக்சியில் அரைத்து சிறிதளவு தேன் கலந்து வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு நீர் அருந்திய பின் 30 - 45 நிமிடம் கழித்து சாப்பிட்டு வர சொல்லுங்கள்.

4. கால் கட்டை விரலை தினமும் (மாதவிடாய் காலத்தில்) மிதமான அழுத்தம் (மசாஜ்) செய்து கொள்ள சொல்லுங்கள். மாதவிடாய் பிரச்சினை சீராகும் காலம் வரை வாரத்தில் ஒருமுறை பாதத்தில் மசாஜ் (அக்கு பிரசர்) செய்து கொள்வது நல்லது. (குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் செய்து விட வேண்டும்)

5. வலி அதிகமாக இருந்தால் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தேநீர் அருந்த சொல்லலாம். இவை கல்லீரலுக்கு ஆற்றலை கொடுத்து உடலின் தசை நார்களின் கடினத்தன்மையை இலகுவாக்குகிறது.

6. வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ளவர்கள், கீழாநெல்லியை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சொல்லுங்கள். உடல் சூடும் தணியும், மேலும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வலுப்பெறும்.

7. உடலின் வெப்பநிலை குறைய தினமும் தலைக்கு குளிப்பதை சிறிது காலத்திற்கு கட்டாயம் ஆக்கச் சொல்லுங்கள். பொதுவாக குளியல் என்றாலே தலை குளியல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

8. பொதுவாக அவர்களை ஒருவேளையாவது நீர் தன்மையுள்ள மற்றும் இனிப்பான பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள சொல்லுங்கள். இவை உடலுக்கு குளிர்ச்சியயையும் தரும் மற்றும் செரிமான மண்டலத்தையும் வலுப்பெறச்செய்யும்.

9. போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். பொதுவாக பெண்களுக்கு உடலின் நீர் பற்றாக்குறையே அவர்களின் பெரும்பாலான தொந்தரவுகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.

10. பொதுவாக மன ரீதியான பிரச்சினைகள் தான் மாதவிடாய் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதையும் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

11. குறைந்தது மாதம் ஒருமுறை நல்லெண்ணெய்யை உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் தேய்த்து 20 நிமிடம் கழிந்து குளித்து வர உடலின் ஹார்மோன் பிரச்சினைகள் சரியாகும். எலும்பு வலுவாகும். தோல் மினுமினுக்கும். உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் உடல் வெப்பம் தணிந்து மாதவிடாய் சீராகும்.

12. இரவில் செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு விரைவில் (9.30 pm) தூங்க செல்ல அறிவுறுத்த வேண்டும்.

இன்னும் நிறைய வழிமுறைகள் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட வழிமுறைகளே நம் வீட்டு பெண்களின் மாதவிடாய் காலம் மற்றும் பிரச்சனைகளை சீரமைக்க உதவியாய் மற்றும் போதுமானதாய் இருக்கும்.
விருப்பத்துடன் இருங்கள். விரைவில் நலம் அடைவார்கள்.
உங்களின் பிரியமானவர்களுக்கு இந்த தகவல்களை பகிருங்கள்.
www.healernandhakumar.com
நன்றி,
நந்தகுமார் (அக்கு ஹீலர்)
எண்ணம் போல் வாழ்க்கை
(+91 8667672900)
மேலும் பல தகவல்களை நமது YOUTUBE சேனலில் (MK HOLISTIC HEALTH) பதிவிடுகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.
1. YouTube: https://www.youtube.com/channel/UCWTK_4gYTkJTQIvVtF6_9nQ
2. WebSite: https://www.healernandhakumar.com
3. FaceBook: https://www.facebook.com/MK-Holistic-Health-105876354292823/
4. WhatsApp: https://chat.whatsapp.com/EJ9nNGYFF414zkqH2BKTgk








Comments